இரு விசும்பு அதிர முழங்கி
|
|
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து,
|
|
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம்
|
|
பருவம் செய்த பானாட் கங்குல்,
|
|
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
|
5
|
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி,
|
|
திண் கால் உறியன், பானையன், அதளன்,
|
|
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
|
|
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
|
|
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
|
10
|
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ,
|
|
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும்
|
|
தண் நறு புறவினதுவே நறு மலர்
|
|
முல்லை சான்ற கற்பின்
|
|
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே.
|
தலைமகன் தேர்ப்பாகற்குச்
சொல்லியது. - இடைக் காடனார்
|
|
மேல் |