இலங்கு சுடர் மண்டிலம்
|
|
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து,
|
|
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து,
|
|
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப,
|
|
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய,
|
5
|
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர்,
|
|
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின்
|
|
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை,
|
|
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை
|
|
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
|
10
|
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர்
எருத்தின்,
|
|
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
|
|
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
|
|
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம
|
|
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும்
|
15
|
உயிர் குழைப்பன்ன சாயல்,
|
|
செயிர் தீர், இன் துணைப்
புணர்ந்திசினோர்க்கே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்
வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. -
பரணர்
|
|
மேல் |