இன் இசை உருமொடு
|
|
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ,
|
|
மன் உயிர் மடிந்த பானாட் கங்குல்,
|
|
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,
|
|
வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத்
|
5
|
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை,
|
|
கூதிர், இல் செறியும் குன்ற நாட!
|
|
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ்
|
|
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற,
|
|
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
|
10
|
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்
|
|
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
|
|
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி,
|
|
மனைமரம் ஒசிய ஒற்றிப்
|
|
பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே.
|
சேட்படுத்து வந்த
தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப்
பண்ட வாணிகன் இளந்தேவனார்
|
|
மேல் |