இன்பமும் இடும்பையும்
|
|
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்,
|
|
நன்பகல் அமையமும் இரவும் போல,
|
|
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து,
|
|
உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம்
|
5
|
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப,
|
|
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே!
|
|
நீ செல வலித்தனைஆயின், யாவதும்
|
|
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர்
|
|
ஆவி அவ் வரி நீர் என நசைஇ,
|
10
|
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை,
|
|
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின்
|
|
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின்
|
|
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின்,
|
|
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த,
|
15
|
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை
|
|
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச்
|
|
சென்றோர் செல்புறத்து இரங்கார்
கொன்றோர்,
|
|
கோல் கழிபு இரங்கும் அதர,
|
|
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே?
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப் பாகைச்
சாத்தன் பூதனார்
|
|
மேல் |