உண்ணாமையின் உயங்கிய
|
|
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
|
|
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல,
|
|
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்
|
|
கான யானை கவின் அழி குன்றம்
|
5
|
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த
|
|
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி
|
|
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
|
|
உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என
|
|
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
|
10
|
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
|
|
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை,
|
|
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
|
|
பெருங் கடல் ஓதம் போல,
|
|
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே.
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. -
காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக்
கண்ணனார்
|
|
மேல் |