உலகு கிளர்ந்தன்ன உரு கெழு
|
|
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
|
|
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப்
போழ,
|
|
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி,
|
|
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட,
|
5
|
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான்
|
|
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய,
|
|
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
|
|
கழியாமையே, அழி படர் அகல,
|
|
வருவர்மன்னால் தோழி! தண் பணைப்
|
10
|
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்,
|
|
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
|
|
பெரு வளம் மலர அல்லி தீண்டி,
|
|
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல்
|
|
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க,
|
15
|
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
|
|
கடி மனை மாடத்துக் கங்குல் வீச,
|
|
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய,
|
|
நிரை வளை ஊருந் தோள்' என,
|
|
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்,
ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது.
-மதுரை மருதன் இளநாகனார்
|
|
மேல் |