உள்ளல் வேண்டும்
|
|
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என
|
|
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
|
|
நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து
|
|
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி,
|
5
|
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,
|
|
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
|
|
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
|
|
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி,
|
|
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
|
10
|
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்
|
|
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப,
|
|
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்,
|
|
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும்
|
|
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல்
|
15
|
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு
கதுப்பின்,
|
|
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என
|
|
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
|
|
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது.
- குடவாயிற் கீரத்தனார் |
|
மேல் |