உறு கழி மருங்கின்
|
|
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
|
|
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப்
|
|
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல்,
|
|
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,
|
5
|
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்!
|
|
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
|
|
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு,
|
|
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம்,
|
|
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின்,
|
10
|
தீதும் உண்டோ, மாதராய்?' என,
|
|
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர்
|
|
கை வல் பாகன் பையென இயக்க,
|
|
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில்
|
|
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி,
|
15
|
சிறிய இறைஞ்சினள், தலையே
|
|
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.
|
தலைமகளைக் கண்ணுற்று
நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன்
இளவேட்டனார்
|
|
மேல் |