உன்னம் கொள்கையொடு
|
|
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
|
|
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
|
|
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
|
|
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;
|
5
|
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்
|
|
பாடிச் சென்ற பரிசிலர் போல
|
|
உவ இனி வாழி, தோழி! அவரே,
|
|
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
|
|
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
|
10
|
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி,
|
|
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி
சுடர்
|
|
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,
|
|
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
|
|
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
|
15
|
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி,
|
|
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
|
|
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள்,
|
|
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,
|
|
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு
|
20
|
அரியவால்' என அழுங்கிய செலவே!
|
வேறுப்பட்ட தலைமகட்குத்
தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
மேல் |