எல்லையும் இரவும்
|
|
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
|
|
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய
|
|
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும்,
|
|
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
|
5
|
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை
|
|
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு,
|
|
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன்
|
|
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்,
|
|
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்,
|
10
|
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு
உரைத்தென,
|
|
வைகு நிலை மதியம் போல, பையென,
|
|
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த
|
|
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
|
|
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
|
15
|
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப,
|
|
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி,
|
|
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு,
|
|
அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல்
மாண்டு
|
|
திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா,
|
20
|
பருவரல் எவ்வமொடு அழிந்த
|
|
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே.
|
இடைச் சுரத்துப் போகாநின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
-எயினந்தை மகனார் இளங்கீரனார்
|
|
மேல் |