எல் வளை ஞெகிழச் சாஅய்
|
|
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை
|
|
நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய,
|
|
பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து,
|
|
இரும்பின் இன் உயிர் உடையோர் போல,
|
5
|
வலித்து வல்லினர், காதலர்; வாடல்
|
|
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர்
|
|
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய,
|
|
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
|
|
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து
|
10
|
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
|
|
பெரு விழா விளக்கம் போல, பல உடன்
|
|
இலை இல மலர்ந்த இலவமொடு
|
|
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. - பாலைபாடிய
பெருங்கடுங்கோ
|
|
மேல் |