ஒழியச் சென்மார் செல்ப
|
|
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம்
|
|
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
|
|
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று
|
|
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர்,
|
5
|
காடு தேர் மடப் பிணை அலற, கலையின்
|
|
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
|
|
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில்
வரி
|
|
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன
|
|
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
|
10
|
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி,
|
|
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
|
|
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள்
|
|
குவளை உண்கண் இவளும் நம்மொடு
|
|
வரூஉம் என்றனரே, காதலர்;
|
15
|
வாராய் தோழி! முயங்குகம், பலவே.
|
உடன்போக்கு உடன்படுவித்த
தோழி தலைமகட்குச் சொல்லியது. -
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
|
|
மேல் |