வழை அமல் அடுக்கத்து
|
|
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர்
|
|
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு,
|
|
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து,
|
|
அரவின் பைந் தலை இடறி, பானாள்
|
5
|
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி,
|
|
துனி கண் அகல அளைஇ, கங்குலின்
|
|
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல்
|
|
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின்,
|
|
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம்
|
10
|
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து
கொண்டு
|
|
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி
|
|
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று,
|
|
கழை தின் யாக்கை விழை களிறு தைவர,
|
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
|
15
|
சாரல் நாடன் சாயல் மார்பே!
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத்
தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது.
-மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்
|
|
உரை |
மேல் |