வள மழை பொழிந்த
|
|
வள மழை பொழிந்த வால் நிறக் களரி,
|
|
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்
|
|
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,
|
|
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்
|
5
|
கை மாண் தோணி கடுப்ப, பையென,
|
|
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்
|
|
எல் இடை உறாஅ அளவை, வல்லே,
|
|
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க,
|
|
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி
|
10
|
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து,
|
|
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ!
|
|
பயப்புறு படர் அட வருந்திய
|
|
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே!
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
உரை |
மேல் |