வாள் வரி வயமான்
|
|
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன
|
|
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
|
|
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில்
|
|
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
|
5
|
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
|
|
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
|
|
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ
|
|
மராஅ மலரொடு விராஅய், பராஅம்
|
|
அணங்குடை நகரின் மணந்த பூவின்
|
10
|
நன்றே, கானம்; நயவரும் அம்ம;
|
|
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
|
|
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்,
|
|
பிடி மிடை, களிற்றின் தோன்றும்
|
|
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!
|
உடன்போகிய தலைமகளைத்
தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
உரை |
மேல் |