விண் தோய் சிமைய
|
|
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
|
|
வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில்,
|
|
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு,
|
|
சிறு கண் யானை நெடுங் கை நீட்டி
|
5
|
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது,
|
|
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
|
|
விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர்
|
|
நல் நிலை பொறித்த கல் நிலை அதர,
|
|
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச்
|
10
|
சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை,
|
|
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர்
வாய்,
|
|
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம்
|
|
மதி ஏர் வாள் நுதல் புலம்ப,
|
|
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே?
|
பிரிவு உணர்த்திய
தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச்
சொல்லியது. -கோடி மங்கலத்து வாதுளி
நற்சேந்தனார்
|
|
உரை |
மேல் |