கடவுட் கற்பொடு குடிக்கு
|
|
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
|
|
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின்
|
|
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்
|
|
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்!
|
5
|
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு
|
|
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,
|
|
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
|
|
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
|
|
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை
|
10
|
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி,
|
|
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை
|
|
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்,
|
|
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர்,
|
|
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க,
|
15
|
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்
|
|
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
|
|
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த்
|
|
தார் மணி பல உடன் இயம்ப
|
|
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே.
|
தலைமகன் வினைவயிற்
பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு
மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
மேல் |