கதிர் கையாக வாங்கி
|
|
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு
|
|
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி,
|
|
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்
|
|
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்;
|
5
|
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன்
|
|
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற.
|
|
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்.
|
|
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி,
|
|
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு
|
10
|
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம்
|
|
இது நற் காலம்; கண்டிசின் பகைவர்
|
|
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்,
|
|
கந்து கால் ஒசிக்கும் யானை,
|
|
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே!
|
பாசறைக்கண் இருந்த தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைத்
தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார்
|
|
மேல் |