வினை நன்றாதல்
|
|
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
|
|
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
|
|
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
|
|
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
|
5
|
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
|
|
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
|
|
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
|
|
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
|
|
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
|
10
|
தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய்
|
|
வெம் பரல் அதர குன்று பல நீந்தி,
|
|
யாமே எமியம் ஆக, நீயே
|
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது
|
|
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை,
|
15
|
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத்
தோள்,
|
|
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின்
|
|
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல.
|
|
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம்
|
|
செய்வினை ஆற்றுற விலங்கின்,
|
20
|
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே?
|
தலைமகன் இடைச்சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்
ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
உரை |
மேல் |