வீங்கு விசை பிணித்த
|
|
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர்
|
|
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்,
|
|
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப்
|
|
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப,
|
5
|
அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட
|
|
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
|
|
ஆண்மை வாங்க, காமம் தட்ப,
|
|
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய,
|
|
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி,
|
10
|
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்;
|
|
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு
|
|
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர்
|
|
வாழ்தல் அன்ன காதல்,
|
|
சாதல் அன்ன பிரிவு அரியோளே!
|
போகாநின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - நரை முடி
நெட்டையார்
|
|
உரை |
மேல் |