வேற்று நாட்டு உறையுள்
|
|
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
|
|
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப,
|
|
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
|
|
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
|
5
|
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற,
|
|
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை,
|
|
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
|
|
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
|
|
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய
|
10
|
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி,
|
|
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்
|
|
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத்
தெறிப்ப,
|
|
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி,
|
|
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை,
|
15
|
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என
|
|
உள்ளுதொறு படூஉம் பல்லி,
|
|
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே?
|
பொருள் முற்றி
மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார்
|
|
உரை |
மேல் |