கழியே, சிறு குரல்
|
|
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப,
|
|
எறி திரை ஓதம் தரல் ஆனாதே;
|
|
துறையே, மருங்கின் போகிய மாக் கவை
மருப்பின்
|
|
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,
|
5
|
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே;
|
|
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
|
|
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது,
|
|
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்
|
|
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப!
|
10
|
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,
|
|
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்
|
|
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,
|
|
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்
|
|
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,
|
15
|
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே!
|
பகற்குறி வந்து நீங்கும்
தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன்
கண்ணனார்
|
|
மேல் |