களையும் இடனால்
|
|
களையும் இடனால் பாக! உளை அணி
|
|
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா
|
|
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய,
|
|
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி,
|
5
|
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்
|
|
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக,
|
|
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல
|
|
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின்,
|
|
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர,
|
10
|
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி,
|
|
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
|
|
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ,
|
|
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,
|
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
|
15
|
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை
|
|
புலம்பு கொள் மாலை கேட்டொறும்
|
|
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு
கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்
|
|
மேல் |