காண் இனி வாழி தோழி
|
|
காண் இனி வாழி, தோழி! பானாள்,
|
|
மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின்,
|
|
மாஅல் யானை புலி செத்து வெரீஇ,
|
|
இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும்
|
5
|
பெருங் கல் நாடன் கேண்மை, இனியே,
|
|
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்,
|
|
மன்ற வேங்கை மண நாட் பூத்த
|
|
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
|
|
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர்
|
10
|
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்
|
|
ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும்,
|
|
விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை
|
|
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி,
|
|
'முருகு' என வேலற் தரூஉம்.
|
15
|
பருவமாகப் பயந்தன்றால், நமக்கே.
|
தோழி தலைமகன்
சிறைப்புறத்தானாக, தலைமகட்குச்
சொல்லுவாளாய்,சொல்லியது. - கொடிமங்கலத்து
வாதுளி நற்சேந்தனார்
|
|
மேல் |