கான மான் அதர் யானையும்
|
|
கான மான் அதர் யானையும் வழங்கும்;
|
|
வான மீமிசை உருமும் நனி உரறும்;
|
|
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய;
|
|
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
|
5
|
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்
|
|
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்,
|
|
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட!
|
|
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ
|
|
இன்று தலையாக வாரல்; வரினே,
|
10
|
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய,
|
|
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின்
|
|
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை,
|
|
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
|
|
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
|
15
|
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே!
|
இரவுக்குறி வந்த தலைமகனை வரவு
விலக்கி வரைவு கடாயது. - கபிலர்
|
|
மேல் |