கானல் மாலைக்
|
|
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப,
|
|
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
|
|
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
|
|
குவை இரும் புன்னைக் குடம்பை சேர,
|
5
|
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை,
|
|
தாழை தளரத் தூக்கி, மாலை
|
|
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
|
|
காமர் நெஞ்சம் கையறுபு இனைய,
|
|
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
|
10
|
அறாஅலியரோ அவருடைக் கேண்மை!
|
|
அளி இன்மையின் அவண் உறை முனைஇ,
|
|
வாரற்கதில்ல தோழி! கழனி
|
|
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
|
|
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை
|
15
|
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை
|
|
அகமடல் சேக்கும் துறைவன்
|
|
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே!
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச்
சொல்லியது.- குன்றியனார்
|
|
மேல் |