கிளியும் பந்தும்
|
|
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
|
|
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
|
|
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,
|
|
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து
யாத்த
|
5
|
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,
|
|
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
|
|
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
|
|
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
|
|
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ!
|
10
|
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி,
|
|
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
|
|
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
|
|
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
|
|
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர்,
|
15
|
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல,
|
|
கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
|
|
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
|
|
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே!
|
உடன்போயின தலைமகளை
நினைந்து, செவிலித்தாய் மனையின்கண்
வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார்
|
|
மேல் |