கிளை பாராட்டும் கடு நடை
|
|
'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு
|
|
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த,
|
|
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி,
|
|
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று,
|
5
|
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து,
|
|
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள்,
|
|
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல்,
|
|
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை,
|
|
படாஅவாகும், எம் கண்' என, நீயும்,
|
10
|
'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி,
|
|
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப்
பார்க்கும்
|
|
பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய்,
|
|
வர எளிதாக எண்ணுதி; அதனால்,
|
|
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
|
15
|
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள்
|
|
அடைய முயங்கேம்ஆயின், யாமும்
|
|
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே
|
|
அன்னை அறியினும் அறிக! அலர் வாய்
|
|
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க!
|
20
|
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு,
|
|
ஒண் பூ வேங்கை கமழும்
|
|
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே!
|
தோழி தலைமகளை இடத்து
உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த
வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. -
கபிலர்
|
|
மேல் |