குவளை உண்கண் கலுழவும்
|
|
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
|
|
திதலை அல்குல் அவ் வரி வாடவும்,
|
|
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார்
|
|
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
|
5
|
நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று
|
|
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி,
|
|
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு,
|
|
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,
|
|
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
|
10
|
காலை வந்தன்றால் காரே மாலைக்
|
|
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
|
|
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
|
|
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,
|
|
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
|
15
|
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர்
திறத்தே?
|
தலைமகன் குறித்த பருவ வரவு
கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
-கருவூர்க் கலிங்கத்தார்
|
|
மேல் |