குறியிறைக் குரம்பைக்
|
|
குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்
|
|
எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன்
|
|
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட,
|
|
விசும்பு அணி வில்லின் போகி, பசும்
பிசிர்த்
|
5
|
திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து,
|
|
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
|
|
பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி,
|
|
தான் இவண் வந்த காலை, நம் ஊர்க்
|
|
கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி,
|
10
|
ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன்
|
|
சாயல் மார்பின் பாயல் மாற்றி,
|
|
'கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச்
|
|
செலவு அரிது என்னும்' என்பது
|
|
பல கேட்டனமால் தோழி! நாமே.
|
தோழி தலைமகன்
சிறைப்புறமாக, தலைமகட்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது. -
உலோச்சனார்
|
|
மேல் |