கூறுவம்கொல்லோ
|
|
'கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?' எனக்
|
|
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது,
|
|
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி,
|
|
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து;
|
5
|
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை
|
|
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின்
|
|
இள மழை சூழ்ந்த மட மயில் போல,
|
|
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து,
|
|
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல்
|
10
|
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து,
|
|
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,
|
|
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
|
|
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது
|
|
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில்,
|
15
|
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன்,
|
|
ஏர் மலர் நிறை சுனை உறையும்
|
|
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே!
|
புணர்ந்து நீங்கிய தலைமகளது
போக்கு நோக்கிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
மேல் |