கேள் கேடு ஊன்றவும்
|
|
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
|
|
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
|
|
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்
சிறந்து;
|
|
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
|
5
|
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன
|
|
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்
|
|
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;
|
|
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,
|
|
வாடா வேம்பின், வழுதி கூடல்
|
10
|
நாள் அங்காடி நாறும் நறு நுதல்
|
|
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,
|
|
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,
|
|
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
|
|
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,
|
15
|
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,
|
|
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்
|
|
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,
|
|
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
|
|
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,
|
20
|
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை
|
|
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை.
|
|
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
|
|
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.
|
வினை முற்றி மீளலுறும்
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - கணக்காயனார் மகனார்
நக்கீரனார்
|
|
மேல் |