கொடுந் தாள் முதலையொடு
|
|
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன்
வழங்கும்
|
|
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
|
|
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப!
|
|
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை
|
5
|
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
|
|
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்.
|
|
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
|
|
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
|
|
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
|
10
|
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ,
|
|
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ்
பொன்
|
|
தண் நறும் பைந் தாது உறைக்கும்
|
|
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே.
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத்
தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங்
கண்ணனார்
|
|
மேல் |