கொடு முள் ஈங்கை
|
|
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த
|
|
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
|
|
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய,
|
|
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி,
|
5
|
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு
நிமிர்ந்து,
|
|
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
|
|
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது,
|
|
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும்,
|
|
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற்
|
10
|
பெருங் காடு இறந்தனர்ஆயினும், யாழ நின்
|
|
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி,
|
|
உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர்
|
|
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை
|
|
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
|
15
|
காலொடு துயல்வந்தன்ன, நின்
|
|
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி
வற்புறீஇயது.-எருக்காட்டூர்த்
தாயங்கண்ணனார்
|
|
மேல் |