சிலம்பில் போகிய
|
|
சிலம்பில் போகிய செம் முக வாழை
|
|
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,
|
|
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்
|
|
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்,
|
5
|
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும்,
|
|
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
|
|
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
|
|
அரிய போலும் காதல் அம் தோழி!
|
|
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
|
10
|
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல்,
|
|
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என,
|
|
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச்
|
|
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள
முலை,
|
|
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு,
|
15
|
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே.
|
பகலே சிறைப்புறமாகத் தோழி
தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.-
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
|
|
மேல் |