செய்வினைப் பிரிதல் எண்ணி
|
|
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
|
|
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
|
|
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
|
|
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
|
5
|
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,
|
|
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச்
|
|
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை
முழங்கும்
|
|
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
|
|
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே,
|
10
|
வசை இல் வெம் போர் வானவன் மறவன்
|
|
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
|
|
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
|
|
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
|
|
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
|
15
|
தண் கமழ் நீலம் போல,
|
|
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.
|
பொருள்வயிற் பிரியக்
கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை
கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி
சாத்தனார்
|
|
மேல் |