செல்க பாக எல்லின்று
|
|
செல்க, பாக! எல்லின்று பொழுதே
|
|
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன்
|
|
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா,
|
|
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை,
|
5
|
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி,
|
|
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன,
|
|
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
|
|
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி,
|
|
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக,
|
10
|
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்,
|
|
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள்
|
|
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
|
|
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல்
|
|
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ,
|
15
|
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என,
|
|
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால்
|
|
அருங் கடி வியல் நகர் நோக்கி,
|
|
வருந்துமால், அளியள் திருந்திழைதானே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர்
மூலங்கிழார் மகனார் பெருந்தலைச்
சாத்தனார்
|
|
மேல் |