சென்மதி சிறக்க நின் உள்ளம்
|
|
சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை
|
|
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை,
|
|
சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ
|
|
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை,
|
5
|
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல்,
|
|
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்!
|
|
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்,
|
|
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக்
|
|
கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து,
|
10
|
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி
|
|
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க்
|
|
கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்,
|
|
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும்,
|
|
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து,
|
15
|
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக்
|
|
கொந்தொடு உதிர்த்த கதுப்பின்,
|
|
அம் தீம் கிளவித் தந்தை காப்பே.
|
பகற்குறிக்கண் தோழி
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - விற்றூற்று
மூதெயினனார்
|
|
மேல் |