தயங்கு திரைப் பெருங் கடல்
|
|
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத்
தோன்றி,
|
|
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம்
|
|
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம்
|
|
பயம் கெடத் திருகிய பைது அறு காலை,
|
5
|
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு,
|
|
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்,
|
|
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி,
|
|
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம்
|
|
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
|
10
|
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ!
|
|
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
|
|
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க,
|
|
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று
|
|
திரு நுதல் பொலிந்த என் பேதை
|
15
|
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே!
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார்
|
|
மேல் |