திருந்துஇழை நெகிழ்ந்து
|
|
திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய்,
|
|
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்!
|
|
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
|
|
பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு
|
5
|
அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப்
|
|
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
|
|
பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல்,
|
|
அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப்
|
|
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ,
|
10
|
வரிப் புற இதலின் மணிக் கட் பேடை
|
|
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட்
|
|
செங் கால், சேவல் பயிரும் ஆங்கண்,
|
|
வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி,
|
|
நல் இசை நிறுத்த நாணுடை மறவர்
|
15
|
நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது,
|
|
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி
|
|
சிறிய தெற்றுவதுஆயின், 'பெரிய
|
|
ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும்,
|
|
நின்றாங்குப் பெயரும் கானம்
|
20
|
சென்றோர்மன்' என இருக்கிற்போர்க்கே.
|
தலைமகளது குறிப்பு அறிந்து,
தோழி தலைமகனைச் செலவு அழுங்கச்
சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
மேல் |