தேம் படு சிமயப் பாங்கர்ப்
|
|
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
|
|
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,
|
|
வான் எனப் பூத்த பானாட் கங்குல்,
|
|
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
|
5
|
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,
|
|
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
|
|
ஐது படு கொள்ளி அங்கை காய,
|
|
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
|
|
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
|
10
|
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
|
|
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து
இசைக்கும்
|
|
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
|
|
ஆர்வம் சிறந்த சாயல்,
|
|
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன்
பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச்
சிறு மேதாவியார்
|
|
மேல் |