தேர் சேண் நீக்கி
|
|
தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, 'நும்
|
|
ஊர் யாது?' என்ன, நணி நணி ஒதுங்கி,
|
|
முன் நாள் போகிய துறைவன், நெருநை,
|
|
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
|
5
|
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன்,
|
|
தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம்
|
|
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என,
|
|
நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே;
|
|
உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்;
|
10
|
நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது
|
|
துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்;
|
|
வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ?
|
|
அம்ம, தோழி! கூறுமதி நீயே.
|
பின்னின்ற தலைமகற்குக் குறை
நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக்
கூறியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
மேல் |