தொடுதோற் கானவன்
|
|
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்,
|
|
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து,
|
|
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும்
|
|
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக
|
5
|
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய
|
|
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை,
|
|
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன்
|
|
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக்
|
|
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்,
|
10
|
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர்
|
|
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி,
|
|
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள்
|
|
கழியாமையே வழிவழிப் பெருகி,
|
|
அம் பணை விளைந்த தேக் கட் தேறல்
|
15
|
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்,
|
|
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர்
|
|
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
|
|
உள்ளி விழவின் அன்ன,
|
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே?
|
பகலே சிறைப்புறமாகத்
தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி
சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்
|
|
மேல் |