நாள் உலா எழுந்த
|
|
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
|
|
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,
|
|
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
|
|
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
|
5
|
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும்
|
|
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
|
|
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
|
|
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள
|
|
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
|
10
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த
|
|
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
|
|
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
|
|
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம்
|
|
மை எழில் உண்கண் கலுழ
|
15
|
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே?
|
பிரிவுணர்த்திய தலைமகற்கு,
தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து
சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்
|
|
மேல் |