நிரை செலல் இவுளி
|
|
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ,
|
|
அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று,
|
|
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய,
|
|
பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய்,
|
5
|
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப்
|
|
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய்
|
|
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப,
|
|
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம்
|
|
அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த
|
10
|
கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில்
மறவர்
|
|
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
|
|
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய,
|
|
வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல்
|
|
கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும்
|
15
|
இன்னா வெஞ் சுரம் இறந்தோர், முன்னிய
|
|
செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து,
|
|
எய்த வந்தனரே தோழி! மை எழில்
|
|
துணை ஏர் எதிர் மலர் உண்கண்
|
|
பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைப்
பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
|
|
மேல் |