நிறைந்தோர்த் தேரும்
|
|
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு,
குறைந்தோர்
|
|
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
|
|
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
|
|
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
|
5
|
மை இல் மான் இனம் மருள, பையென
|
|
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
|
|
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
|
|
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
|
|
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
|
10
|
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,
|
|
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக்
|
|
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
|
|
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
|
|
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
|
15
|
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,
|
|
இது கொல் வாழி, தோழி! என் உயிர்
|
|
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
|
|
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?
|
பொருள்வயிற் பிரிந்த
இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி
சொல்லியது - அந்தியிளங்கீரனார்
|
|
மேல் |