நீலத்து அன்ன நிறம்
|
|
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்,
|
|
காமர் பீலி, ஆய் மயில் தோகை
|
|
இன் தீம் குரல துவன்றி, மென் சீர்
|
|
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி,
|
5
|
கண் நேர் இதழ, தண் நறுங் குவளைக்
|
|
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
|
|
நீடு நீர் நெடுஞ் சுனை ஆயமொடு ஆடாய்,
|
|
உயங்கிய மனத்தையாகி, புலம்பு கொண்டு,
|
|
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி,
|
10
|
அன்னை வினவினள்ஆயின், அன்னோ!
|
|
என் என உரைக்கோ யானே துன்னிய
|
|
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி,
|
|
ஓடை யானை உயர் மிசை எடுத்த
|
|
ஆடு கொடி கடுப்ப, தோன்றும்
|
15
|
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே?
|
பகலே சிறைப்புறமாகத் தோழி
தலைமகட்குச் சொல்லியது. - மதுரை மருதன்
இளநாகனார்
|
|
மேல் |