நுதலும் தோளும்
|
|
'நுதலும் தோளும், திதலை அல்குலும்,
|
|
வண்ணமும், வனப்பும், வரியும், வாட
|
|
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
|
|
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது,
|
5
|
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை,
|
|
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப,
|
|
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள,
|
|
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
|
|
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
|
10
|
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து,
|
|
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
|
|
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
|
|
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு
|
|
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
|
15
|
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள
|
|
மறப் புலி உழந்த வசி படு சென்னி
|
|
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
|
|
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
|
|
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை,
|
20
|
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே?
|
செலவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி
தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற்
கீரத்தனார்
|
|
மேல் |