பகல் செய் பல் கதிர்ப்
|
|
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
|
|
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென,
|
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
|
|
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
|
5
|
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்
|
|
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
|
|
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி,
|
|
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
|
|
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென,
|
10
|
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்!
|
|
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
|
|
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப,
|
|
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி
|
|
நல் மா மேனி தொலைதல் நோக்கி,
|
15
|
இனையல் என்றி; தோழி! சினைய
|
|
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப்
|
|
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து,
|
|
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை,
|
|
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம்
|
20
|
இன் இளவேனிலும் வாரார்,
|
|
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத்
தலைமகள், வன்புறை எதிர் அழிந்து,
சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்
சாத்தனார்
|
|
மேல் |