படு மழை பொழிந்த
|
|
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
|
|
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
|
|
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
|
|
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
|
5
|
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,
|
|
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
|
|
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
|
|
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்
|
|
காமர் துணையொடு ஏமுற வதிய,
|
10
|
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;
|
|
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
|
|
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
|
|
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
|
|
நம் வயிற் புரிந்த கொள்கை
|
15
|
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற்
புல்லாளங்கண்ணியார்
|
|
மேல் |